அனைத்து மண்பாண்ட கடைகளையிம்
அடித்து நொறுக்கினர்
அரசு அதிகாரிகள்
சாலையை ஆக்கிரமித்து
கடை விரித்திருப்பதாய் சொல்லி..
அரசை எதிர்த்து
மண்பாண்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்ட
அத்தனை போராட்டங்களும்
பயனற்று போன நிலையில்
இப்பொழுதெல்லாம்
எளிதாக கடக்க முடிகின்றன அந்த சாலையை
மணல் அள்ளும் லாரிகளால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக