திங்கள், 24 ஆகஸ்ட், 2009

கேள்வி

புவியியல் ஆசிரிய‌ர் பாடம் ந‌ட‌த்தினார்

"ஒரு காலத்தில் இயங்கி கொண்டிருந்து,
இப்பொழுது இயங்காமல்
இருக்கும் எரிமலைகள்
இறந்த‌ எரிமலைகள் எனப்படும்". என்று.

திருப்பிக்கேட்டேன்

ஒருகால‌த்தில் இய‌ங்கி கொண்டிருந்து,
இப்பொழுது செய‌ல‌ற்று போய்
இருக்கும்
த‌மிழ‌க‌ ந‌திக‌ளை
என்ன‌ சொல்வீர்க‌ள் என்று.