திங்கள், 23 நவம்பர், 2009

ஒரு கோடை வாழிடத்தின் கதை

முன்பு பாட்டன் காலத்த்தில்
மலை உச்சியை அடைய
நடந்துதான் செல்ல வேண்டி இருக்கும்.

பின்பு தாத்தாவின் காலத்தில்
புகைவண்டி பயணம் சாத்தியமயிற்று.

அப்பாவின் காலத்தில் நிமிடத்திற்கொருமுறை
பேருந்து பயணம் அறிமுகமாயிற்று.

இப்பொழுது நானோ
ஹெலிஹாப்டரில் சென்று விடுவேன்.


என் மகனுக்கு பிரச்சினை இல்லை


சாலை அமைக்கவும், எஸ்டேட் வளர்க்கவும்
உல்லாச விடுதிகள் கட்டவும்
மரங்களையெல்லாம் வெட்டித்தள்ளியதால்
இப்பொழுது மலை உச்சியே
அவன் வீட்டு முற்றத்தில்...

புதன், 18 நவம்பர், 2009

சட்டம் தன் கடமையைச் செய்யிம்

அங்கிருக்கும்
அனைத்து மண்பாண்ட கடைகளையிம்
அடித்து நொறுக்கினர்
அரசு அதிகாரிகள்
சாலையை ஆக்கிரமித்து
கடை விரித்திருப்பதாய் சொல்லி..

அரசை எதிர்த்து
மண்பாண்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்ட‌
த்தனை போராட்டங்களும்
பயனற்று போன நிலையில்
இப்பொழுதெல்லாம்
எளிதாக கடக்க முடிகின்றன அந்த சாலையை
மணல் அள்ளும் லாரிகளால்...

சனி, 14 நவம்பர், 2009

பருவம் மீட்பு படலம்

கணிப்பொறி பொறியாளராய்
நாடுகள் பலச்சுற்றி

சொந்த ஊருக்கு வந்தபோது

"வாப்பா தம்பி" என்றழைத்த
அப்பா,அம்மாவிடமும்..

"எப்பண்ணா வந்தீங்க?" என்றழைத்த‌
சகோதரியிடமும்..

"நல்லாயிருக்கீயாப்பா?" என்றே
சொல்லி வைத்தாற்போல் அழைத்த
அத்தனை சொந்த,பந்தங்களிடமும்..

கண்டுபிடிக்க முடியாத‌
என் கிராமத்து பால்ய பருவ‌த்தை
"ஏண்டா நாயே, எப்புடிடா இருக்க?" என்றழைத்த
நண்பனிடம் மட்டும்
கண்டுகொண்டேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

அன்புள்ள காதலிக்கு . . .

என் ப்ரியமானவளே!
இன்று!நீ உன்னை
மறந்துவிடச் சொல்கிறாய்.

உனக்கு தெரியாதா?
உன்னை மறப்பதும்
நான் இறப்பதும்
ஒன்றுதான் என்று...

நீ கேட்காம‌லே
மொபைல்போன் முத‌ல் முத்த‌ம் வ‌ரை
ப‌ரிச‌ளித்த‌வ‌ன் நான்.

இன்றோ!
என்னை மறந்துவிடு என‌று வாய் திற‌ந்து கேட்கிறாய்.
நானோ வாய‌டைத்து நிற்கிறேன்..
"என்னைக் காப்பாற்றுங்கள் என்று
திரௌபதி கதறியபோது
பாண்டவர்கள் நின்றது போல‌....

உன் காத‌லை த‌விர‌
எதையும் யாசிக்காத‌ நான்
முத‌ன் முத‌ல் உன்னிட‌ம் யாசிக்கிறேன்.

உன்னை ம‌ற‌ப்பதற்க்கு
சிறிது கால‌ அவ‌காச‌ம் ம‌ட்டும்
என‌க்கு கொடு..

இணையத்தால் இனைந்திருக்கும் உலகம்
இதயத்தாலும் இனையுமே!
அப்பொழுது....

ராணுவத்துறையை விட‌
சுற்றுலாதுறைக்கு அதிகம் செலவு செய்யுமே என் தேசம்!
அப்பொழுது....

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைக்குமே!
அப்பொழுது....

பெற்றோல்,டீசல்
காயப்படுத்தாத‌ காற்றை சுவாசிப்போமே!
அப்பொழுது....

நான் கவிதைக‌ள் எழுதுவதை நிறுத்துவேனே!
மன்னிக்கவும்
கவிதைக‌ள் வாசிப்பதை நிறுத்துவேனே!
அப்பொழுது....

கண்டிப்பாய் நான் உன்னை மறந்து விடுகிறேன்...

வியாழன், 12 நவம்பர், 2009

சுழலும் உலகம்

காடு திருத்தி கழனியாக்கியபோது
உயர்தினை ஆனான்
அஃறினையான‌ ஆதிவாசி..

கழனி திருத்தி
ஆலையாக்கியபோது
தன்மண்ணை தானே
பாலையாக்கியபோது
அஃறினையானான்
உயர்தினையான‌ நகரவாசி..

செவ்வாய், 10 நவம்பர், 2009

நதிக்கரை

நாடோடியாய்த் திரிந்தவன்
நதிக்கரையை அடைந்தாநதிக்கரையை அடைந்தவுடன்
நாகரிகம் அடைந்தான்.
நாகரிகம் அடைந்தவுடன்..

நாசமாக்கினான்

நதிக்கரையை மட்டுமல்ல‌
நதியையிம் சேர்த்து.

வெள்ளி, 6 நவம்பர், 2009

வலியின் வலிமை

எனக்கே தெரியாமல் என்னுள்
ஆக்ஸிஜன் போல் அமைதியாய் ஊடுறுவிய
காதல்..
பிரியிம் போது மட்டும்
ஈழநிலம் இழந்த‌
தமிழ்மகனைப் போல‌
துடித்துடிக்க வைப்பதேனோ?