சனி, 14 நவம்பர், 2009

பருவம் மீட்பு படலம்

கணிப்பொறி பொறியாளராய்
நாடுகள் பலச்சுற்றி

சொந்த ஊருக்கு வந்தபோது

"வாப்பா தம்பி" என்றழைத்த
அப்பா,அம்மாவிடமும்..

"எப்பண்ணா வந்தீங்க?" என்றழைத்த‌
சகோதரியிடமும்..

"நல்லாயிருக்கீயாப்பா?" என்றே
சொல்லி வைத்தாற்போல் அழைத்த
அத்தனை சொந்த,பந்தங்களிடமும்..

கண்டுபிடிக்க முடியாத‌
என் கிராமத்து பால்ய பருவ‌த்தை
"ஏண்டா நாயே, எப்புடிடா இருக்க?" என்றழைத்த
நண்பனிடம் மட்டும்
கண்டுகொண்டேன்.

கருத்துகள் இல்லை: