வெள்ளி, 13 நவம்பர், 2009

அன்புள்ள காதலிக்கு . . .

என் ப்ரியமானவளே!
இன்று!நீ உன்னை
மறந்துவிடச் சொல்கிறாய்.

உனக்கு தெரியாதா?
உன்னை மறப்பதும்
நான் இறப்பதும்
ஒன்றுதான் என்று...

நீ கேட்காம‌லே
மொபைல்போன் முத‌ல் முத்த‌ம் வ‌ரை
ப‌ரிச‌ளித்த‌வ‌ன் நான்.

இன்றோ!
என்னை மறந்துவிடு என‌று வாய் திற‌ந்து கேட்கிறாய்.
நானோ வாய‌டைத்து நிற்கிறேன்..
"என்னைக் காப்பாற்றுங்கள் என்று
திரௌபதி கதறியபோது
பாண்டவர்கள் நின்றது போல‌....

உன் காத‌லை த‌விர‌
எதையும் யாசிக்காத‌ நான்
முத‌ன் முத‌ல் உன்னிட‌ம் யாசிக்கிறேன்.

உன்னை ம‌ற‌ப்பதற்க்கு
சிறிது கால‌ அவ‌காச‌ம் ம‌ட்டும்
என‌க்கு கொடு..

இணையத்தால் இனைந்திருக்கும் உலகம்
இதயத்தாலும் இனையுமே!
அப்பொழுது....

ராணுவத்துறையை விட‌
சுற்றுலாதுறைக்கு அதிகம் செலவு செய்யுமே என் தேசம்!
அப்பொழுது....

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைக்குமே!
அப்பொழுது....

பெற்றோல்,டீசல்
காயப்படுத்தாத‌ காற்றை சுவாசிப்போமே!
அப்பொழுது....

நான் கவிதைக‌ள் எழுதுவதை நிறுத்துவேனே!
மன்னிக்கவும்
கவிதைக‌ள் வாசிப்பதை நிறுத்துவேனே!
அப்பொழுது....

கண்டிப்பாய் நான் உன்னை மறந்து விடுகிறேன்...

கருத்துகள் இல்லை: