மலிவுவிலை மதுக்கடைகளில்
தள்ளாடும் நாங்கள்
நாளைய இந்தியாவை
தாங்கபோகும்தூண்கள்.
பங்க் கடைகளில்
கணக்கு வைத்து
புகைந்து கொண்டிருக்கும் நாங்கள்
எதிர்கால இந்தியாவின்எழுச்சி தீபங்கள்.
வெள்ளித் திரையின் இருளில்
சிறை இருக்கும் நாங்கள்
நாளை உதயமாக போகும்
இந்தியாவின் விடிவெள்ளிகள்.
டிஸ்கொதே கிளப்புகளில்
அரைநிர்வாண பெண்களுடன்
ஆடிகொண்டிருக்கும் நாங்கள்
நாளைய இந்தியாவை ஆளப்போகும் அரசர்கள்.
அமெரிக்க கனவுகளுடன்
உறங்கிக் கொண்டிருக்கும் நாங்கள்
நிகழ்கால தலைவர்களின்
கனவுகளில் வரும்கதாநாயகர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக