அந்திப்பொழுதில்கன்றீந்த
தன்
வெள்ளைப் பசுவிற்காய்
இரவெல்லாம் தூங்காமல்
கண்விழித்திருந்த
மேலத்தெரு
சாமிராசும்
தனக்கு தெரியாமல்
மயிலக் காளையை
விற்றதற்காக
மூன்றுநாள்
சாப்பிடாமல் அடம்பிடித்த
பக்கத்துவீட்டு சுந்தரமும்
மாட்டுக்கு
புல்லறுக்கையில்
தன் விரலை
அறுத்துக் கொண்ட
கெடாமீசை முருகேசனும்
இப்பொழுது
சிறைச்சாலையில்
ஜல்லிக்கட்டு நடத்தி
பசுவதை செய்தகுற்றத்திற்காக..
1 கருத்து:
அருமை..கவிதை வாசிக்கும் போது காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.
கருத்துரையிடுக