வெள்ளி, 23 மே, 2008

உழவன் மகன்

தாத்தா

யானை கொண்டு

போரடித்த இடத்தில்

அப்பா

காளை கொண்டு

போரடித்த இடத்தில்

மகன்

தன் நண்பர்களுடன்

பேசிக்கொண்டிருக்கிறான்

போரடிக்கிறதென...

1 கருத்து:

M.Rishan Shareef சொன்னது…

கவிதையின் இறுதியில் புன்னகை படர்கிறது..கூடவே காலமாற்றத்தின் சோகமும்,நாம் இழந்தவற்றின் வலியும்..